ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள கூலி திரைப்படம் முதல் நாளில் 151 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, இதன் மூலம் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பெற்றதாக கூறப்படுகிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் அமெரிக்காவில் மிக வேகமாக 30 லட்சம் டாலர்களை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.