நடிகர் ராகவா லாரன்ஸ் கண்மணி அன்னதான விருந்து என்கிற புதிய அன்னதான சேவையைத் துவங்கியுள்ளதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது அம்மா பெயரில் மனதுக்கு நெருக்கமான 'கண்மணி அன்னதான விருந்து' தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும்.வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே இந்த விருந்தின் நோக்கம் என்றும் கூறியுள்ளார். ((மேலும் இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார்.