ஹாலிவுட்டின் மிகப்பெரிய பேஷன் கண்காட்சியான மெட் காலா நிகழ்வில் பங்கேற்ற நடிகை பிரியங்கா சோப்ராவின் உடையை, அவரது கணவர் நிக் ஜோனஸ் சரி செய்து விட்ட புகைப்படங்கள் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் மெட் காலா ஆடை வடிவமைப்பு வருடாந்திர கண்காட்சியில், கருப்பு வெள்ளை உடையில் தோன்றிய பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதியர், படு ஸ்டைலாக போஸ் கொடுத்தும், ஒய்யாரமாக நடந்து வந்தும் பார்வையாளர்களை கவர்ந்தனர். அப்போது மடங்கிய நிலையில் இருந்த மனைவியின் கவுனை, நிக்ஜோனஸ் கீழே குனிந்து சரிசெய்து விட்டார்.