காஷ்மீர் பகல்காம் தாக்குதல் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின சமூகத்தினர்கள் மோதிக்கொண்ட சம்பவங்களை போன்றது என பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா மீது SC/ST சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, பகல்காம் தாக்குதலை பழங்குடியின மக்களோடு ஒப்பிட்டு பேசியது சர்ச்சைய ஏற்படுத்தியது. இது குறித்து ஐதராபாத்தை சேர்ந்த லால் சவுகான் என்பவர் போலிசில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : வீர தீர சூரன்' பட இயக்குநருடன் இணையும் கமல்..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு..!