ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசனின் குரலை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக கமலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த வாரம் கமல் குரல் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம், ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.