மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை என மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கன்னட மொழி குறித்த சர்ச்சையால் கர்நாடாவில் தக் லைஃப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் உட்பட நடிகர்களோ, தயாரிப்பாளர்களோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும் இவ்விவகாரம் தொடர்பாக வாய்திறக்கவில்லை.