வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் விரைவில் 'வடசென்னை 2' படம் உருவாக உள்ளதாக 'இட்லி கடை திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார். சம்பள பிரச்சனை காரணமாக சிம்புவுக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் சுமூகமாக முடிந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிகிறது.