நடிகை நித்யா மேனன், தான் பெற்ற தேசிய விருதை தனது பெற்றோருடன் காண்பித்து மகிழ்ச்சியடைந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம், நடிகை நித்யா மேனன் பெற்றுக் கொண்ட நிலையில், தனது பெற்றோருடன் தேசிய விருதை காண்பித்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.