சூர்யாவின் 47-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லோகா மற்றும் பிரேமலு படத்தில் நடித்த நஸ்லின் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள இந்த படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.