அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான நரிவேட்டை திரைப்படம், வரும் 11 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படி கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம், கடந்த மே 23 ஆம் தேதி வெளியானது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் தமிழில் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் மலையாளத்தில் அறிமுகமானார்.