இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகவுள்ள மைலாஞ்சி திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா, கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் மைலாஞ்சி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பாடல்களை எழுதி இளையராஜா இசையமைக்க, இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.