சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் 'மை லார்ட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை, "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார். படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின், "எச காத்தா", "ராசாதி ராசா" ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : "இபிஎஸ் அறிவிப்பால் திமுக கூடாரத்திற்கு நடுக்கம்"