"மாம்-2" படப்பிடிப்பு : உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புதிய சர்வதேச திரைப்பட நகரத்தில் ((International Film City)) தயாரிப்பாளர் போனி கபூரின் "மாம்-2" ((Mom 2)) படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த திரைப்பட நகரத்தில் படமாக்கப்படும் முதல் படம் என்ற பெருமையைப் "மாம்-2" பெறுகிறது. கிரிஷ் கோலி இயக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நவாசுதீன் சித்திக் குஷி கபூர் மற்றும் கரிஷ்மா தன்னா நடிக்கின்றனர். இந்த புதிய திரைப்பட நகரம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் தளமாக உருவாக்கப்பட்டு வருவதாக திரைப்பட வல்லுநர்கள் தெரிவித்தனர். Related Link சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 46-வது திரைப்படம்