கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தனது பெயரை குறிப்பிட்டு ஆட்டோகிராஃப் போட்ட ஜெர்சி, பரிசாக கிடைத்திருப்பதாக நடிகர் மோகன் லால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அந்த ஜெர்சியில் மெஸ்ஸி ஆட்டோகிராஃப் போடும் வீடியோவை பகிர்ந்துள்ள மோகன்லால், தனது பெயரை மெஸ்ஸி கைப்பட எழுதி இருப்பது நம்பமுடியாத தருணம் என சிலாகித்து பதிவிட்டுள்ளார்.