நகைக்கடை விளம்பர வீடியோவில் பெண்மைத் தன்மையுடன் நடித்துள்ள நடிகர் மோகன்லாலின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதில், மாடல் அழகி அணிந்திருக்கும் வைர நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லட் மீது மோகன்லாலுக்கு ஆசை ஏற்படுவதாகவும், பின்னர் மாடல் அழகி நகைகளை கழற்றி வைத்த பிறகு மோகன்லால் அவற்றை அணிந்து கொண்டு ரசிப்பது போலவும் காட்சி அமைந்துள்ளது.