மெட் காலா ஃபேஷன் ஷோவில்,கருப்பு நிற சபியாசச்சி உடையில், கையில் புலி செங்கோல், கழுத்தில் K நெக்லஸ் என படு ஸ்டைலாக நடிகர் ஷாருக்கான் தோன்றினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் மியூசியத்தில் நடைபெற்ற மெட் காலா ஃபேஷன் ஷோவில் கலந்து கொள்வதற்கு முன் தனது ரசிகர்களை சந்தித்தார். ஹாலிவுட்டின் மிகப்பெரிய ஃபேஷன் நிகழ்வான மெட் காலாவில் கலந்து கொண்ட முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றுள்ளார்.