மகா அவதார் நரசிம்மா என்ற புராண திரைப்படம் உலகளவில் இதுவரை 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக, அத்திரைபடத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.