பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியம் நாவலை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ளார். இது 2022 ஆம் ஆண்டு வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம் ஆகும். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் ,அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இந்த இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார்.