இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு "DC" என பெயரிடப்பட்டுள்ளது. தேவதாஸ் கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திரா கதபாத்திரத்தில் நடிகை வாமிகா கபியும் ((WAMIQA GABBI)) நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.