விஜயின் ஜனநாயகன் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வினோத் அண்ணாவும், விஜய் அண்ணாவும் ஜனநாயகனில் கேமியோ செய்ய அழைத்தார்கள், தற்போதைக்கு தன்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்" என்றார்.