கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் லோகா திரைப்படத்துக்கு, இரவு காட்சிகளில் கூடுதலாக 365 காட்சிகளை அதிகரித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பெண் சூப்பர் ஹீரோவை கதை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகி வெற்றி நடைபோடுகிறது.