பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் கிங் திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.