நீண்ட இடைவேளைக்கு பிறகு எஸ்ஜே சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். எஸ்ஜே சூர்யா-க்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். ஏற்கெனவே ஏஆர் ரஹ்மான்-எஸ்ஜே சூர்யா கூட்டணியில் நியூ, அன்பே ஆருயிரே படங்கள் வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் கில்லர் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.