பாலிவுட்டில் பல வெற்றி திரைப்படங்களை வழங்கிய சிக்யா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் உருவாக்கப்போகும் இந்தக் கதை இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது என்றும்,சரியான தயாரிப்பாளரை கண்டறிந்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும் கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.