தக்லைப் திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த கன்னட அமைப்புகள், தக்லைப் படத்தை வெளியிடும் திரையரங்குகள் தீயிட்டுக் கொளுத்தப்படும் என எச்சரித்தனர். இதனால் கர்நாடகாவில் படம் வெளியாகாத நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது அம்மாநில அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் படம் திரையிடும் தியேட்டர் மற்றும் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : AIFF அட்டவணையில் ISL தொடர் குறித்து குறிப்பில்லை..