இன்று வெளியாகவிருந்த தமது எமர்ஜென்சி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டு விட்டதாக இந்தி நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். சென்சார் சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் திட்டமிட்டபடி இன்று படத்தை ரிலீஸ் செய்யவில்லை என அவர் தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்பது தெரியாது என்பதால் கனத்த இதயத்துடன் இதை தெரிவிப்பதாக கங்கனா ரணாவத் குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தியாக நடித்து அவர் இயக்கி உள்ள எமர்ஜென்சி படத்தில் சீக்கியர்களும், காலிஸ்தான் போராட்டமும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி முக்கிய சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது.