சினிமாவில் 65 ஆண்டுகளை நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் நிறைவு செய்தார். ஐந்து வயதில் நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் திரையில் தோன்றிய கமல், முதல் படத்திலேயே ஜெமினிகணேசன், சாவித்ரி, மனோரமா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி எனப் பல மொழிகளிலும் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.