கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய 237 படக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்பறிவு மாஸ்டர்ஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படக்குழு தொடர்பான புகைப்படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. அதன்படி படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படம் ஆங்கிலம் மற்றும் பின்லாந்து மொழியில் வெளியான ‘Sisu’ திரைப்படத்தின் ரீமேக் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.