கல்கி 2898 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தீபிகா படுகோனே ஒத்துழைப்பு தராததால் அவரை நீக்க படக்குழு முடிவு செய்துள்ளது. கல்கி முதல் பாகத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்து 1,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கல்கி போன்ற படத்திற்கு அதிக கமிட்மெண்ட் தேவைப்படுவதால் தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.