தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரான ரவி தேஜாவை வைத்து, சுந்தர்.சி அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் கதையை கேட்ட உடன் ரவி தேஜா ஓகே சொன்னதாகவும், தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுத்து வரும் சுந்தர்.சி, இந்த படம் முடிந்த உடன் புதிய படத்தின் பணிகளை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.