‘அமரன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவையொட்டி சாய் பல்லவி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு நினைவுகளை பகிர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படம், மறைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.