மறைந்த தமது மகள் பவதாரணியின் பெயரில் "பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா" என்ற பெண்களுக்கான இசைக்குழுவை தொடங்கிய இசையமைப்பாளர் இளையராஜா, திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் இளம்பெண்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார். "allgirlsorchestra@gmail.com" என்ற மெயிலில் விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை அனுப்பலாம் என பதிவிட்டுள்ளார். நேருக்கு நேர், பிரண்ட்ஸ், மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல திரைப்படங்களின் பாடல்களை பாடி பிரபலமான பவதாரணி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.