தனது அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு, அடுத்த சிம்பொனி எழுத துவங்க உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய படைப்பாக சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை எழுத உள்ளதாகவும், தீபாவளி நாளில் இதனை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார். இளையராஜா தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை கடந்த மார்ச் மாதம் லண்டனில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.