தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அருண் விஜய் வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1-ஆம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் 2-ஆவது சிங்கிளை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.