மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ள 'பைசன்' திரைப்படம் வருகிற 17ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. 'பைசன்' படம் குறித்து துருவ் விக்ரம் பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், “இதுவரை என் வாழ்க்கையில் நான் எந்த விளையாட்டிலும் கலந்து கொண்டது கிடையாது. இந்த படத்துக்காக தான் முதல் முறையாக கபடி விளையாடினேன்.ஒருமுறை படப்பிடிப்பின்போது என் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. என் தந்தையிடம் (விக்ரம்) அந்த தகவலை சொன்ன போது, ஆறுதல் கூட சொல்லாமல் சந்தோஷப்பட்டார். 'சினிமாவில் இது சகஜம். இதை பழகிக் கொண்டால் நீ முன்னேறலாம்' என்றார். என் தந்தையுடன் என்னை ஒப்பிட முடியாது தான். இருந்தாலும் அவரை நடிப்பு ரீதியாக தோற்கடிக்க நான் தொடர்ந்து முயற்சிப்பேன், என்னை யார் என்று அடையாளப்படுத்த தொடர்ந்து இது மாதிரியான நல்ல படங்களில் நடித்து பெயர் எடுப்பதே என் லட்சியம்", என கூறியுள்ளார்