வன்முறை இல்லாமல், காதல் மற்றும் ஆக்சன் கலந்த கதையாக இருக்கும் திரைப்படங்களை மதுரை சாயலில் நிச்சயமாக நடிப்பேன் என நடிகர் தினேஷ் தெரிவித்தார், மதுரை செல்லூரில் தேநீர் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ரஞ்சித் இயக்கி வரும் படத்தில் நடித்து வருவதாகவும், ஆர்யா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் கூறினார்.