நடிகை சோனியா அகர்வால் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் முக்கிய படங்களில் நடித்திருந்தாலும் குறிப்பாக தமிழில் காதல் கொண்டேன், கோவில் என சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்குனர் செல்வ ராகவனை திருமணம் செய்து கொண்டு அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்தும் பெற்றுவிட்டார் திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்காமல் தான் இருந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு கஜினி பட வாய்ப்பு தேடி வந்ததாக கூறப்படுகிறது. "கஜினி படத்தில் அசின் மெயின் ஹீரோயினாக நடித்திருப்பார், மற்றொரு ரோல் எனக்கு வந்தது. ஆனால் அது வேண்டாம் என கூறிவிட்டேன். அசின் ரோல் என்றால் செய்கிறேன், இந்த ரோல் வேண்டாம் என சோனியா அகர்வால் கூறி விட்டாராம். அதற்கு பிறகு தான் நயன்தாராவை அந்த ரோலில் முருகதாஸ் நடிக்க வைத்தாராம்.