தான் உண்மையிலேயே மது அருந்தும் பழக்கத்தை நிறுத்திவிட்டதாக தெரிவித்த, நடிகர் பாபி தியோல், இது தனக்கு கடவுள் வழங்கிய இரண்டாவது வாய்ப்பாக கருவதாக தெரிவித்தார். நான் குடிப்பதை நிறுத்திய பிறகு, ஒரு சிறந்த மனிதனாக மாறிவிட்டேன் என நினைப்பதாக தெரிவித்த பாபி தியோல், இதனால் தனக்குத் தெரிந்த அனைவருடனும் தனது உறவு நூறு மடங்கு சிறப்பாகிவிட்டது என்றும் நினைப்பதாக கூறினார்.