நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ளதால் வரும் காலங்களின் அவரின் திரைப்படங்களை பார்க்க முடியுமா என தெரியவில்லை என்று நடிகர் துருவ் விக்ரம் கூறினார். பைசன் திரைப்படத்தில் நடித்தது குறித்து துருவ் விக்ரம் அளித்த பேட்டியை அவரது தந்தையான நடிகர் விக்ரம் தமது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தமது தந்தையை தவிர்த்து, விஜய், ஷாருக்கான், ரன்பீர் கபூர் ஆகியோர் பிடித்த நடிகர்கள் என குறிப்பிட்ட துருவ் விக்ரம், அந்த பட்டியல் இன்னும் மாறவில்லை என்றும் கூறினார்.இதையும் படியுங்கள் : சிவப்பு நிற SAREE அணிந்து போஸ் கொடுக்கும் சிம்ரனின் வீடியோ