ஹாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான டாம் குரூஸ் - அனா டி அர்மாஸ் தங்களது காதல் உறவை முறித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 9 மாதமாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்றும் வதந்தி பரவியது. ஆனால் மாறாக இருவரும் பிரிந்து விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இருவருக்கும் இடையிலான ஆர்வம் குறைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், இந்த உறவு எதிர்காலத்தில் நீண்ட காலம் நீடிக்காது என உணர்ந்து இருவரும் இணக்கமாகப் பிரிவது நல்லது என்று முடிவு செய்ததாக கூறப்படுகிறது.