ஹலோ கிட்டி அனிமேஷன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2028ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன் மற்றும் நியூ லைன் சினிமா அறிவித்துள்ளது. குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் ஹலோ கிட்டியை பெரிய திரையில் கண்டு களிக்க வகை செய்யும் இப்படம் உருவாகியுள்ளது.