நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நடித்துள்ள ”ஹரி ஹர வீர மல்லு” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையமைத்துள்ளார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பவன் கல்யான் துணை முதல்வர் ஆன பின்பு வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.