அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம், நீண்ட நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமாகியிருந்த நிலையில், படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இரண்டு படங்களில் எது முதலில் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு குட் பேட் அக்லி வெளியாகும் என தயாரிப்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.