ராமின் பறந்து போ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கு பிடிக்கும் என்று இயக்குநர் அட்லீ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், படம் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், படத்தில் அப்பா-மகன் உறவை மிக அழகாக காட்டி இருப்பதாகவும் கூறினார். சிவா, அஞ்சலி கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது என்றும், ராம் அண்ணாவுக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார்.