அபுதாபியில் நடைபெறும் கார் ரேஸ்-ல் முழுமையாக கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமாருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். QR CODE-ஐ ஸ்கேன் செய்த பிறகு வரிசையில் நின்று அஜித்துடன் போட்டோ எடுக்கும் வகையில் ரசிகர்களுக்கு ரேஸிங் குழு ஏற்பாடு செய்திருந்தது. ரசிகர்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவராக அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா, ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதையும் படியுங்கள் : ஜன.14 ஆம் தேதி வெளியாகும் 'வா வாத்தியார்' திரைப்படம்