திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகினர் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த வரி குறைப்புக்கு வழி வகுத்து தந்த தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.