தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் கார் ரேஸ் மீது அளவு கடந்த அன்பை கொண்டவர். தற்போது, முழுமையாக கார் ரேஸில் ஈடுபட்டு வரும் அஜித், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கலந்து கொண்ட கார் ரேஸில், பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், தனது கார் ரேஸை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடியபோது, ரசிகர்களை அவர் எப்படி ஒழுங்குபடுத்தினார் என்பது புரிகிறது அதில், ’எனக்கு நீங்க நல்ல பெயர் வாங்கி தர வேண்டாம். அட்லீஸ்ட் கெட்ட பெயர் வராமல் இருந்தால் போதும். உங்க ஆர்வம் எனக்கு புரிகிறது. யு லவ் மீ சோ மச், ஐ லவ் யு டு. பட் மத்தவங்க அந்த அன்ப தப்பா புரிஞ்சிக்காம இருக்க ஒரே ஒரு வழி தான் இருக்கு. எல்லாரும் கண்ணியமா நடத்துக்குங்க. ஒவ்வொரு பேட்டிகளிலும் என்னுடைய ரசிகர்கள் கண்ணியமானவங்கனு சொல்லிட்டு வரேன், அந்த பெயரை காப்பாத்துங்க. இது என்னுடைய அன்பான கட்டளை, ப்ளீஸ். இப்போ நிம்மதியா போய் நான் ரேஸ் ஓட்டலாமா. உங்கள நம்பலாமா. மிக்க நன்றி, லவ் யு ஆல்” என பேசியுள்ளார்