சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் கோட் படம் பார்க்க வந்த இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் செல்ஃபி எடுத்ததால், ரசிகர் ஒருவரை திரையரங்கு உரிமையாளர் தாக்கியதாக கூறி விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை பார்ப்பதற்காக அப்படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு, கமலா திரையரங்கிற்கு வந்துள்ளார்.அப்போது, அவரிடம், செல்ஃபி எடுத்த ரசிகர் ஒருவரை, திரையரங்கு உரிமையாளர் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முற்பட்டதாக கூறப்பட்டதாக கூறி ரசிகர்கள், திரையரங்கு நிர்வாகிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.