இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு செவ்வாய்கிழமை முதல் கேரளாவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும், படத்தின் முக்கிய காட்சிகள் அங்கு எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினி கேரளாவின் கோழிக்கோட்டிற்கு சென்ற நிலையில், விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.