நடிகர் தனுஷின் 54வது திரைப்படத்தை முதலில் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிருந்த படக்குழு, தற்போது தமிழ் புத்தாண்டிற்கு வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு ஆகியவற்றை வரும் பொங்கலுக்கு வெளியிட, வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.